Thursday, January 21, 2010

What is love?

காதல் என்பது ஓர் ஆண் ஒரு பெண் மிது கொள்ளும் அன்போ அல்லது ஒரு பெண் ஓர் ஆண் மிது கொண்டிருக்கும் அன்பு மட்டும் கிடையாது. மனிதனாகிய ஒவ்வொருவருக்கும் உணர்ச்சிகள், ஆசைகள், பல கனவுகள் இருக்கின்றன. இவ்வனைத்தும் இல்லாதவர்கள் கடவுளால் படைக்கப்பட்ட உயிர் உள்ள உடல் கிடையாது. வெறும் தோல் போர்த்தியே மறகட்டைகளே அவர். காதல் என்பது ஒன்றின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ கொள்ளும் ஆழ்ந்த அன்பு, ஒரு வகையான பாசம். அவற்றின் மீதோ அல்லது அவர்களின் மீதோ கொள்ளும் அன்புக்கு அவர்களிடமிருந்து அனுமதி பெறவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒருவரிடமோ ஒன்றிடமிருந்தோ வற்புறுத்தி பெரும் அன்புக்கு காதல் என்று பொருள் விளங்காது. அதற்கு பெயர் அன்பை விலை கொடுத்து விற்றதற்கு சமமாகும்... பெற்றவர்கள் பிள்ளைகள் மீது  கொண்டிருப்பதும் காதல், நண்பர்கள் மற்ற நண்பர்கள் மீது கொண்டிருப்பதும் காதல்தான். புலி மான் மீது கொண்டிருப்பதும் காதல்தான்...இப்படி எவ்வளவோ காதலை அடுக்கிக்கொண்டு  போகலாம்....இப்பூமி பந்து சுழலும் வரை காதல் என்ற சொல் பல உயிர்களாகவும் , பல மொழியாகவும் உருவெடுத்து வாழ்ந்து கொண்டே இருக்கும்...



No comments:

Post a Comment