Tuesday, December 31, 2013

நட்பின் ஏக்கம்


நான் வடக்கிலிருந்து
நீ தெற்கிலிருந்து என்று
ஏதேதோ திசையிலிருந்து வந்தோம்!
வெவ்வேறு துருவங்களின் சங்கதிகளாக
இணைந்தோம்!
ஒற்றைப் பல்லவியாக உருவானோம்!
பேசினோம்; பழகினோம்;
உன் மொழி நான் அறியவில்லை,
என் மொழி நீ அறியவில்லை,
ஆனாலும், சுவாசமாய் வாழ்ந்தோம்!
இராகம் என்னும் இசையில்
ஸ்ருதியோடு லயமாக கீதம் பாடினோம்!
அன்று, நட்பு என்னும் மூன்றெழுத்து
நம்மை இணைத்தது,
இன்று, பிரிவு என்னும் மூன்றெழுத்து
நம்மைத் தூரப்படுத்துகிறது,
வசந்த காலம் கடந்து கோடைக் காலமும்
வந்துவிட்டது – ஐயகோ
உன் பிரிவின் ஏக்கம் ஏனோ,
என் கண்களைக் குளமாக்கியதே!